சேந்தை வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள்


சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள வாரச்சந்தை, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை கூடும். சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காந்திபுரம், ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, அக்கியம்பட்டி மற்றும் வடுகப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது தோட்டத்தில் உற்பத்தி செய்த காய்கறி, பழங்களை விற்பனைக்கு சேந்தமங்கலம் வாரச்சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.


தற்போது, ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அதனால், நேற்று கூடிய வாரச்சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, ஏராளமான மக்கள் திரண்டனர்.

Advertisement