சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு

7

சென்னை: ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக போலீஸ் அறிவித்துள்ளது.



திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த சிறுமியை மர்ம ஒருவர் பின்தொடர்ந்து சென்று கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்தது.


இந்த நபர் பற்றிய எந்த தகவலும் இது வரை கிடைக்காத நிலையில், சிசிடிவி கேமிராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான படத்தை தமிழக போலீஸ் வெளியிட்டது. மேலும், அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவம் நடத்து பல நாட்கள் கடந்தும், குற்றவாளி பிடிபடாத நிலையில், அவனை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம் என்று தமிழக போலீஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.


மேலும், தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தமிழக போலீஸ் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் கூறி உள்ளது.


இந்த அறிவிப்புடன், தேடப்படும் நபரின் போட்டோக்களையும் போலீஸ வெளியிட்டு இருக்கிறது.

Advertisement