வெஸ்ட் இண்டீசை வென்றது ஆஸ்திரேலியா * மிட்சல் ஓவன் அரைசதம்

கிங்ஸ்டன்: முதல் 'டி-20' போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார்.
சேஸ் ஆறுதல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (18), கேப்டன் ஷாய் ஹோப் ஜோடி துவக்கம் தந்தது. ராஸ்டன் சேஸ், 32 பந்தில் 60 ரன் (2x6, 9x4) எடுத்து அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவரில் 159/2 என வலுவான நிலையில் இருந்தது.
இந்நிலையில் அரைசதம் அடித்த ஹோப் (55), அறிமுக 'ஆல் ரவுண்டர்' மிட்சல் ஓவன் 23, வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த பாவெல் (1), ரசல் (8), ரூதர்போர்டு (0), ஹோல்டர் (0) நிலைக்கவில்லை. ஹெட்மயர், 38 ரன் எடுத்தார். கடைசி 30 ரன் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில், 189/8 ரன் மட்டும் எடுத்தது.
ஓவன் விளாசல்
ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ் (24), ஜேக் பிராசர் (2), இங்லிஸ் (18), மேக்ஸ்வெல் (11) என 'டாப் ஆர்டர்' வீரர் 'ஷாக்' கொடுக்க, 78/4 ரன் என திணறியது. பின் கேமரான் கிரீன், மிட்சல் ஓவன் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. கிரீன் 26 பந்தில் 51 ரன் எடுத்து அவுட்டானார். சிக்சர்களாக விளாசிய ஓவன் 27 பந்தில், 50 ரன் (6X6) எடுக்க, வெற்றி எளிதானது.
ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 190/7 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
மூன்றாவது வீரர்
ரிக்கி பாண்டிங் (98 ரன், 2005, நியூசி.,), வார்னருக்கு (89, 2009, தெ.ஆப்.,) அடுத்து, அறிமுக 'டி-20' போட்டியில் அரைசதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் ஆனார் ஓவன் (50 ரன்).
மேலும்
-
மாணவிகளை கடத்த முயற்சி
-
உசிலையில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்
-
மதுரை காமராஜ் பல்கலையில் 6 ஆண்டாக பதவி உயர்வு இல்லை: மனஉளைச்சலில் அலுவலர்கள்
-
சீரமைக்கப்பட்டுவரும் மதுரை ஸ்டேஷனில் கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு: செயின் பறிப்பு சம்பவத்திற்கு பிறகாவது ரயில்வே விழிக்குமா
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்: பலதுறை பணி பாதிப்பு: பணிச்சுமையால் அவகாசம் கேட்கும் வருவாய்த்துறை
-
தினமலர் செய்தியால் தீர்வு