மதுரை காமராஜ் பல்கலையில் 6 ஆண்டாக பதவி உயர்வு இல்லை:  மனஉளைச்சலில் அலுவலர்கள்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை அலுவலர்களுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அலுவலர்கள் மனஉளைச்சலில் உள்ளதுடன், பல்வேறு முக்கிய பணிகள் தொடர்ந்து காலியாக கிடக்கின்றன.

இப்பல்கலையில் கிளார்க், உதவியாளர், கண்காணிப்பாளர், உதவி, துணை பதிவாளர்கள் என 400க்கும் மேற்பட்ட ரெகுலர் பணியிடங்களில் தற்போது 200க்கும் மேற்பட்டவை பல ஆண்டு களாக காலியாக உள்ளன.

2018க்கு பின் அலு வலர்கள் நியமனம் இல்லை. தற்போதுள்ள அலுவலர்கள் 100க்கும் மேற்பட் டோருக்கு 6 ஆண்டுகளாக பதவி உயர்வும் இல்லை. உதவி பதிவாளர் பதவிக்கு சிலர் தகுதி பெற்று அதற்கான பேனலில் இடம் பெற்றுவிட்டனர். ஆனாலும் பதவி உயர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் பலர் பதவி உயர்வு பலனை பெறாமலேயே ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதவிர பல்கலையில் உச்ச பதவிகளான பதிவாளர், தொலை நிலைக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளன. அலுவலக பிரிவில் பி.ஆர்.ஓ., உதவி, துணைப் பதிவாளர்கள் உட்பட முக்கிய பணி யிடங்களும் காலியாக உள்ளன. இதனால் ஒரு உதவிப் பதிவாளர்கள் மூன்று செக் ஷன்களை கவனிக்க வேண்டியதால் பணிச் சுமையில் தவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து பல்கலை அலுவலர்கள் கூறிய தாவது:

செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பின் பதவி உயர்வு, பணி நியமனங்கள் நடக்க வில்லை. 2019ல் கிருஷ்ணன் துணைவேந்தராக இருந்தபோது சிலருக்கு பதவி உயர்வு அளித்தார்.

அதன் பின் 6 ஆண்டு களாக 'பேனல்' தயாரிக்கப் பட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பாதிப்பில் உள்ளனர். துணைவேந்தர் இல்லாத நிலையில் கன்வீனர் சுந்தரவள்ளி கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவராவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement