மாணவிகளை கடத்த முயற்சி

மேலுார்: மேலுார் சந்தப் பேட்டையை சேர்ந்த மாணவிகள் இருவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கின்ற னர். நேற்று காலை மாணவிகள் இருவரும் சந்தப்பேட்டையில் இருந்து பள்ளிக்கு செல்ல அவ்வழியே வந்த ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் ஒரு மூதாட்டியும் சென்றார்.

ஆட்டோ செக்கடி பகுதியில் சென்றபோது டிரைவர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாது எனக்கூறி மூதாட்டியை கீழே இறக்கி விட்டார். இதை யடுத்து டிரைவர் ஆட்டோ வின் இருபுற ஸ்கிரீனை இறக்கிவிட்டு ஆட்டோவை சிவகங்கை ரோட்டில் திருப்பினார்.

சந்தேகமடைந்த மாணவிகள் சத்தம் போட்டு, ஆட்டோவில் இருந்து கீழே குதித்தினர். அலறல் சத்தம் கேட்டு மக்கள் ஓடி வரவே டிரைவர் ஆட்டோவில் தப்பினார். மாணவிகள் நடந்த சம்பவத்தை ஆசிரியரிடம் கூறவே அவர் குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணையில் நம்பர் இல்லாத ஆட்டோ என்பது தெரிய வந்துள்ளது. மேலுார் மகளிர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி சி.சி.டிவி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கிறார்.

Advertisement