இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 1.38 லட்சம் மாணவர்கள் பயன்

கரூர், இல்லம் தேடி கல்வி திட்டத்தில், 1.38 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை, சரிசெய்யும் பொருட்டு இல்லம் தேடி கல்வி திட்டம், 387 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 1,38,346 மாணவ, மாணவியர் பயனடைந்து உள்ளனர்.

தற்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 4,925 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு, 387 தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தினசரி மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை தன்னார்வலர்களை கொண்டு மாணவ, மாணவியரின் குடியிருப்பு பகுதிகளிலேயே கற்றல் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இடைநிற்றல் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement