' கொடை' சார் பதிவாளர் அலுவலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் அதிகாரிகள்

கொடைக்கானல்: -கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலாதலமான கொடைக்கானலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வரும் நிலையில் இங்கு சொத்துக்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் செலுத்துகின்றனர்.

மாவட்டத்தில் அதிகளவு பத்திரப்பதிவு செய்யும் இடமாக கொடைக்கானல் உள்ளதாலும் வருவாய் அதிகம் உள்ளதாலும் இங்கு பணியாற்ற போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இங்கு வகைப்படுத்தாத நிலங்கள் இஷ்டம் போல் பதிவு செய்யும் போக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. பத்திரப்பதிவுகளிலும் முறைகேடுகள் அரங்கேறுகின்றன.

இங்குள்ள சார்பதிவாளர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் இளநிலை உதவியாளரே பத்திர பதிவுகளை மேற்கொண்டு வரும் நிலை உள்ளது.

மேலதிகாரிகள் ஒத்துழைப்புடன் சில சார்பதிவாளர்கள், உதவியாளர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியில் இருப்பது குறித்து புகார் உள்ளது.

இதனிடையே ஒரே அலுவலகத்தில் நீண்ட காலமாக உள்ள சார்பதிவாளர், உதவியாளர்கள் குறித்த விபரங்களை பட்டியலாக அனுப்பும்படி பதிவு டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதோடு நீண்ட காலம் இருப்பவர்கள் மீது நிலுவையில் உள்ள புகார்கள், வழக்குகள் கொடுத்த விவரங்களையும் அனுப்பவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

பத்திர பதிவுத்துறையின் அறிக்கைக்கு பின் கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement