உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் உழவர் சந்தையை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் 48 கடைகள் உள் ளது. இந்த சந்தைக்கு தினமும் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்இருந்து 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி மற்றும் கீரை வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த உழவர் சந்தையை நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறைகளை ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் உழவர் சந்தை மூலம் அவர்கள் பயனடைந்து வருவது குறித்தும், அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், உழவர் சந்தைக்கு வந்த மக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி, வேளாண் அலுவலர் (உழவர் சந்தை) அருண்குமார் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி
-
மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைக்க வேண்டும்: முதல்வருக்கு பா.ஜ., வலியுறுத்தல்