கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி; பயணத்திட்டம் இதோ!

12

சென்னை: கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, பிரதமர் மோடியின் வருகையின் பயணத்திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.


@அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டினார். ஜூலை27ம் தேதி, ஆடித்திருவாதிரை நட்சத்திர தினத்தில் அவரது பிறந்த நாள்.

இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் பயணத் திட்டம் குறித்து விவரம் பின்வருமாறு:

ஜூலை 26ம் தேதி

இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமானநிலையம் வருகை.

இரவு 8.30-9.30 மணிக்கு விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு.

இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்து தங்குகிறார்.

ஜூலை 27ம் தேதி

காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு.

மதியம் 2.25 மணிக்கு திருச்சி விமானநிலையத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார்.

Advertisement