ஒரு தலைக்காதலால் கத்தி முனையில் மாணவியை மிரட்டிய வாலிபர்: தர்ம அடி கொடுத்த மக்கள்

4

மும்பை: மஹாராஷ்டிராவில் ஒரு தலைக்காதலால், மாணவி ஒருவரை கத்தி முனையில் மிரட்டிய வாலிபரை அக்கம் பக்கத்தினர் அடி கொடுத்து மாணவியை மீட்டனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தின் பசப்பா பீத் கரன்ஜே பகுதியில், மாணவி ஒருவரை , இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

இதனை அந்த மாணவி ஏற்காத நிலையில், நேற்று அந்த இளைஞர், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில், அவரை கத்தி முனையில் சிறைபிடித்தார். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். தன்னை விட்டுவுிடும்படி அந்த மாணவி கெஞ்சியதை அவர் பொருட்படுத்தவில்லை.


இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர். மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை அருகில் வரக்கூடது என அவன் மிரட்டினான் அபு்போது, அவனுக்கு பின்னால் இருந்த மதில் சுவர் மீது ஏறி குதித்து அந்த இளைஞனை தாக்கினார்.


பிறகு, அங்கிருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டதுடன், அந்த இளைஞரை அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, இந்த பகுதிகளில், போலீஸ் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement