மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

9

புதுடில்லி: கடந்த 2006ல் நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளையும் விடுவித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது.

கடந்த ஜூலை 11, 2006 அன்று மும்பையின் மேற்கு ரயில்வே உள்ளூர் பாதையில் 7 குண்டுவெடிப்புகளை சதி செய்து செயல்படுத்திய சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 5 குற்றவாளிகளுக்கு (ஒருவர் உயிரிழப்பு) துாக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. இது தொடர்பான அப்பீல் வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நேற்று ரத்து செய்தது. குற்றவாளிகளை விடுவித்தும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மஹராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படை பிரிவு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
வழக்கை வரும் 24 ம் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

மஹாராஷ்டிர ஏ.டி.எஸ். சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விஷயத்தின் அவசரத்தைக் காரணம் காட்டி, அவசர விசாரணையை கோரியதைத் தொடர்ந்து வழக்கு பட்டியல் இடப்பட்டது.

Advertisement