7 பேரிடம் ரூ. 8.57 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
புதுச்சேரி: புதுச்சேரியில், 7 பேரிடம் 8.57 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மாபுரியை சேர்ந்த பெண் ஒருவரை அறிமுகம் இல்லாத நபர் தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். வங்கியில் கே.ஒய்.சி., அப்டேட் செய்ய வேண்டும் என, கூறினார். மொபைல் போனுக்கு வந்தஓ.டி.பி., எண்ணை மர்ம நபருக்கு அனுப்பினார். அவரது வங்கி கணக்கில் இருந்து, 98 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
லாஸ்பேட்டையை சேர்ந்த நபரிடம் பேசியவர், வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறினார். அதை நம்பி, அவர், 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். முதலியார்பேட்டையை சேர்ந்த பூபாலகிருஷ்ணன், பூச்செடிகள் ஆர்டர் செய்ய முன்பணம் 45 ஆயிரம் ரூபாய் அனுப்பி, ஏமாந்தார்.
மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவரை அறிமுகம் இல்லாத நபர் டெலிகிராம் குரூப்பில் இணைந்தார். அதில், வீட்டில் இருந்தபடியே,ஆன்லைன் மூலம், சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறினார். அதை நம்பி, பல்வேறு தவணைகள் மூலம் 6.45 லட்சம் ரூபாயை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்தார்.
வில்லியனுாரை சேர்ந்த பெண் ஒருவரை வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பிய அவர், 90 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
முதலியார்பேட்டை சேர்ந்த நபர் 6 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் 13 ஆயிரம் அனுப்பி ஏமாந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்