'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

திண்டுக்கல் : மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம்,கிராம பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முகாம் நடந்தது.

பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். மக்கள் வழங்கிய மனுக்களையும் பெற்றார். தி.முக., ஒன்றிய செயலாளர் வெள்ளி மலை, பி.டி.ஓ.,க்கள் ராஜசேகர், வடிவேல் முருகன்,ஏ.பி.டி.ஒ., ராஜா, ஊராட்சி செயலாளர் சுதாகர், தாசில்தார் ஜெயபால் கலந்து கொண்டனர்.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதுபோல் திண்டுக்கல் நேருஜிநகர் ஜான்பால் பள்ளியிலும் முகாம் நடந்தது.

Advertisement