காணையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம்,: காணையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமை, ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் அடுத்த காணையில் மாம்பழப்பட்டு, மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி குத்துவிளக்கேற்றி வைத்து முகாமை துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா, ஆர்.முருகன், முருகன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், பி.டி.ஓ.,க்கள் சிவநேசன், ஜூலியானா முன்னிலை வகித்தனர்.
இதில் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திரா தேவி மற்றும் சத்தியபாமா, தி.மு.க., நிர்வாகிகள் பழனி, மதன், புனிதா அய்யனார், தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், வழக்கறிஞர் அணி அய்யப்பன், இளைஞரணி அமைப்பாளர் மணியரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
-
' ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பார்லி.,யில் விவாதம்: ஜூலை 29ல் பதிலளிக்கிறார் பிரதமர் மோடி
-
மோசடியில் இது புதுசு: போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது