திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை: திருமணமாகாத விரக்தியில், இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மேலதொட்டியபட்டி பெரியகுளம் பகுதியில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக, விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் மேலதொட்டியபட்டியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி முரளி, 33, என்பதும், நீண்ட நாட்களாக அவருக்கு பெண் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

இதில், விரக்தியடைந்த முரளி, நேற்று முன்தினம், வீட்டின் அருகே பெரியகுளம் பகுதியில் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement