சூதாடிய 3 பேர் கைது

விழுப்புரம் : பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன், கோலியனுார் சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பணம் வைத்து சூதாடிய கோலியனுாரைச் சேர்ந்த நடராஜன், 49; மோகன், 47; சிவகுருநாதன், 41; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தார்.

Advertisement