ரூ.101 கோடி பண மோசடி: பீஹாரில் வங்கி அதிகாரி கைது

பாட்னா: பீஹாரில் ரூ.101 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக, கூட்டுறவு வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் மற்றும் அவரது 2 கூட்டாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செயதனர்.


பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் சையத் ஷாநவாஸ், இவர் 1998 முதல் 2023 வரை பாட்னா மற்றும் வைசாலியில் உள்ள இரு கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றினார். சையத் ஷாநவாஸ், பணியாற்றிய காலத்தில், வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த அரசு பணம் ரூ.101 கோடியை போலி கணக்கு மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சையத் ஷாநவாஸை, இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாா் கூறியதாவது:

101 கோடி பண மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த கூட்டுறவு வங்கி கிளையின் முன்னாள் அதிகாரி சையத் ஷாநவாஸ் மற்றும் அவரது இரு கூட்டாளிகளான சவுகத் அலி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில்,சயீத் ஷாநவாஸ், அவரது மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து மோசடியாகவும், வங்கியின் மற்ற ஊழியர்களுடன் இணைந்தும் போலி கணக்குகளைத் திறந்தும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் பணத்தை மோசடி செய்து அரசு நிதியை (பணியாளர் பங்களிப்புகள் உட்பட) டெபாசிட் செய்தது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement