குடியிருப்பு வீடு கட்டும் திட்டம் கலெக்டர் தலைமையில் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம்., ஜன்மன் திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நசீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement