கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் கோலியனுாரான் வாய்க்கால் துார்வரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வழுதரெட்டி, இந்திரா நகர் பகுதியிலிருந்து அனிச்சம்பாளையம் வரை கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறுகையில், 'தெளிமேடு கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்று திறந்தமடை வாய்க்காலில் தொடங்கி, விழுப்புரம் நகராட்சி வழியாக கோலியனுார் ஏரி வரை 18 கி.மீ., நீளம் இந்த வாய்க்கால் செல்கிறது. விழுப்புரம் நகராட்சி வழுதரெட்டி இந்திரா நகர் பகுதியில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 கி.மீ., நீளத்திற்கு அனிச்சம்பாளையம் வரை துார்வாரும் பணிகள் நடக்கிறது. 3 மீட்டர் ஆழமும், 2 மீட்டர் அகலத்திற்கு துார்வாரப்படுகிறது' என்றார்.
நகராட்சி கமிஷனர் வசந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி