'மாஜி' அமைச்சர் மீது அவதுாறு : அ.தி.மு.க., மனு  

கடலுார் : முன்னாள் அமைச்சர் சம்பத் மீது அவதுாறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., வினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில், விழுப்புரம் மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பிரித்திவி தலைமையில், நிர்வாகிகள் அளித்த மனு:

பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் சம்பத் துாண்டுதல் பேரில், போலீசார், சோதனை நடத்தியதாக சமூக வலைதளத்தில் மர்ம நபர்கள் அவதுாறு பரப்புகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகுதி செயலாளர் வெங்கட்ராமன், இளைஞர் அணி ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆனந்த், பகுதி பொருளாளர் வெங்கடேசன், வார்டு செயலாளர் நாகராஜன், மாவட்ட பிரிதிநிதி தமிழ்செல்வன் உடனிருந்தனர்.

Advertisement