கார் திருடிய வழக்கு வட மாநில வாலிபர் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே விவசாயியின் காரை திருடிச் சென்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடு த்த பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 60; பு.முட்லுார் நான்கு வழி சாலையில் கடைகள் கட்டி வருகிறார். நேற்று முன்தினம் கட்டுமானப் பணிகளை பார்வையிட காரில் சென்றார்.

கட்டுமான பணி நடைபெறும் இடம் அருகே காரை நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் உள்ளே சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர், திடீரென காரை திருடிச் சென்றார்.

அதிர்ச்சி அடைந்த அவர், நண்பர் ஒருவர் உதவியுடன் மற்றொரு காரில், மர்ம நபரை பின் தொடர்ந்தார்.

மயிலாடுதுறை அருகே சென்ற போது அவரது கார், டிசல் இல்லாததால் மர்ம நபர் விட்டு தப்பியது தெரிந்தது. இதையடுத்து அவர், காரை ஓட்டி வந்து, நடந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து ஒடிசா மாநிலத் தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி துலாராம்காடு, 25; என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், கார் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement