திருக்கோவிலுார் பள்ளியில் அறிவியல் மன்ற துவக்க விழா

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அறிவியல் மன்ற துவக்க விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கி மன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.
உதவி தலைமை ஆசிரியர் கவிதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் மன்ற தலைவர் வில்வபதி வரவேற்றார்.
ஆசிரியர்கள் சங்கரன், திருமலை, குணசேகரன், அருள் கலந்து கொண்டு அறிவியல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.
தொடர்ந்து மன்றத்தின் சார்பில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறிவியல் மன்ற மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருவள்ளூர் சிறுமி பலாத்காரம்: மே.வங்கத்தை சேர்ந்தவர் கைது
-
ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி பேச்சு
-
செல்வநிலை சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பேரூர் தாசில்தார் கைது
-
முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு
-
ரூ.15 லட்சத்துக்கு குழந்தைகள் விற்பனை: பெண் இடைத்தரகர் கைது, வெளிவராத பின்னணி தகவல்கள்
-
எனது தவறு தான்…: எதைச் சொல்கிறார் ராகுல்
Advertisement
Advertisement