ஜூலை 26ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் ஜூலை 26ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம், ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தவுள்ளன.

போக்குவரத்து நகர், முகம்மது சதக் ஹமீது மகளிர் கல்லுாரியில் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். மாவட்டத்தை சேர்ந்த 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஆசிரியர்கள், செவிலியர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட கல்வித்தகுதி உடையவர்களும் பங்கேற்கலாம்.

விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்பட்டர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. பயோடேட்டா, அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வரவேண்டும்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது rmdjobfair01@gmail.com என்ற மின்னஞ்சல், 04567- 230160 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement