சத்துணவு ஓய்வூதியர்கள் போராட்டம்

திண்டிவனம் : தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் ஒலக்கூர், வானுார், மரக்காணம், மயிலம் கிளைகள் சார்பில் நேற்று காலை திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் போராட்டம் நடந்தது.

குறைந்தபட்ச ஓய்வூதியம் 6750 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு முக்காடிட்டு நடந்த போராட்டத்தில், மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பேசினர்.

சங்க மாவட்ட இணை செயலாளர் வெண்மதி நன்றி கூறினார்.

Advertisement