யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி

சென்னை:டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வில் யாரோ செய்த தவறுக்காக, தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியாக்குவதில் நியாயமில்லை என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த ஜூலை12 அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
@twitter@ https://x.com/annamalai_k/status/1947956980837937307twitter
எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடினமாக உழைத்துத் தயாரானவர்களும், இறுதியில் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட.
அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அந்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23 ஜூலை,2025 - 21:18 Report Abuse

0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
23 ஜூலை,2025 - 21:12 Report Abuse

0
0
Reply
Neelachandran - Thanjavur,இந்தியா
23 ஜூலை,2025 - 20:35 Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
23 ஜூலை,2025 - 20:14 Report Abuse

0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
23 ஜூலை,2025 - 19:21 Report Abuse

0
0
Reply
vivek - ,
23 ஜூலை,2025 - 18:08 Report Abuse

0
0
Reply
Rajakumar P. - ,இந்தியா
23 ஜூலை,2025 - 18:01 Report Abuse

0
0
Reply
N S Sankaran - Chennai,இந்தியா
23 ஜூலை,2025 - 17:59 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement