அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி

9

ஆமதாபாத்: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


இரண்டு பேர் குஜராத்திலும், ஒருவர் டில்லியிலும், மற்றொருவர் நொய்டாவிலும் கைதாகி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதா இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை.


அவர்களின் செயல்பாடுகள், சதிச் செயலில் ஈடுபட்டனரா என்பது விசாரணை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், இது முக்கியமானது என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் தெரியவந்துள்ளது.

இதன்படி,


டில்லியைச் சேர்ந்த முகமது பயிக்

குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த முகமது பர்தீன்

குஜராத்தின் மொடாசாவை சேர்ந்த செபுல்லா குரேஷி

உ.பி., நொய்டாவின் ஜீஷன் அலி ஆகியோர் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement