சிவக்கொழுந்து பிறந்த நாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி : பிறந்த நாள் கொண்டாடிய, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்துக்கு, முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும், சப்தகிரி குழும சேர்மன் சிவக்கொழுந்து,தனது பிறந்த நாள் விழாவை, குடும்பத்தினருடன் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர். அதனை தொடர்ந்து, லாஸ்பேட்டை என்.ஆர்., காங்., அலுவலகத்தில் நடந்த விழாவில், அவருக்கு முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, 4 ஆயிரம் பேருக்கு, முதல்வர் ரங்கசாமி தலைமையில், சிவகொழுந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனை தொடர்ந்து, லாஸ்பேட்டை சேர்ந்தவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முதல்வருடன் சேர்ந்து வழங்கினார்.

பிறந்த நாள் கொண்டாடிய, சிவகொழுந்திற்கு, மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் லட்சுநாராயணன், ஜான்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள், ரமேஷ், பாஸ்கர், லட்சுகாந்தன், சந்திர பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன் மற்றும் ரமேஷ்குமார், டாக்டர் விஜய்ஆனந்த், என்.ஆர்., காங்., நிர்வாகிகள்,லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், கம்பன் கழக நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement