' ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பார்லி.,யில் விவாதம்: ஜூலை 29ல் பதிலளிக்கிறார் பிரதமர் மோடி

8

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நடக்கும் விவாதத்தில் வரும் செவ்வாய் ( ஜூலை29) அன்று பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.


காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தான் மீது நடவடிக்கையை துவக்கிய மத்திய அரசு அதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைத்தது. இதன் கீழ் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது நமது முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில் அந்நாட்டு விமானப்படை தளங்கள் சேதம் அடைந்தன. இதனால் தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது.இதனையடுத்து தாக்குதல் நிறத்தப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலை நிறுத்தியது நான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை கூறி வருகிறார். ஆனால், இதனை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.


இந்நிலையில்,பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இதில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என அறிவித்தது. இந்த வாரம் இந்த விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அடுத்த வாரத்துக்கு இந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


வரும் செவ்வாய்க்கிழமை அன்று ' ஆபரேஷன் சிந்தூர்'குறித்து ராஜ்யசபாவில் அடுத்த வாரம் நடக்கும் எனவும், அதற்கு வரும் செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement