ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், 'கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் போதிய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மின்சார வாரியம் கோவிலில் உள்ள மின் வழித்தடங்களை சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்' என்றார். எஸ்.பி., சரவணன், ஆர்.டி.ஓ., முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement