இருமடங்காக விலை உயர்ந்த தக்காளி

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்கு அதிகரித்து கிலோ ரூ.36க்கு விற்பனை ஆனது.

ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், பெரிய கோட்டை சுற்றிய கிராம பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. இம்மாத துவக்கத்தில் வரத்து அதிகமாக இருந்த நிலையில் ஆந்திர வியாபாரிகளும் தக்காளியை வாங்க வராததால் தக்காளி கிலோ ரூ.18 க்கு விற்றது.

இந்நிலையில் தற்போது பல இடங்களில் அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைய தொடங்கியது. இருந்தபோதிலும் வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைக்காமல் இருந்ததால் விலை அதிகரித்தது.

நேற்று தக்காளி விலை கிலோ ரூ.18 லிருந்து ரூ.36 ஆக அதிகரித்து விற்பனை ஆனது. ஆந்திர வியாபாரிகள் கொள்முதல் செய்ய வரும் போது விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement