வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

திருவெண்ணெய்நல்லுார் : வயிற்று வலியால், எலி பேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் மேல்வீதியை சேர்ந்தவர் முத்து ராஜா, 55; டிபன் கடை நடத்தி வந்தார். இவர், சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த, 16ம் தேதி திருக்கோவிலுாரில் இருந்து ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள மகளைப் பார்க்க பஸ்சில் சென்றார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த புதுப்பாளையம் நிறுத்தத்தில், பஸ் சென்ற கொண்டிருந்தபோது வயிற்று வலி அதிகமானதால், ராஜா தான் வைத்திருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

உடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement