காலாவதி மருந்துகள் புதைப்பு

வேடசந்துார்: வேடசந்துார் - கரூர் நெடுஞ்சாலை கல்வார்பட்டி ரங்கமலை கணவாய் அருகே காலாவதி மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து ரோட்டோரம் கொட்டி செல்கின்றனர்.

இதன் தகவல் வாட்ஸ் ஆப் களில் பரவியது.

இதை தொடர்ந்து கலெக்டர் சரவணன் உத்தரவில் வேடசந்தூர் ஒன்றிய நிர்வாகம், கல்வார்பட்டி ஊராட்சி நிர்வாகம் பெரிய அளவிலான குழியை தோண்டி பயன்பாடற்ற மருத்துவப் பொருட்களை போட்டு மூடி சென்றனர்.

Advertisement