அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை நிர்வாகிகள் கூட்டம்

வானுார் : அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவையின் வானுாா் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.

கூட்டத்தில், பேரவை நிறுவனர் வெங்கடேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சண்முகம், ராமமூர்த்தி, வேலு, முருகன், சவுந்தரராஜன், பிரகாஷ், உதயகுமார்முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தெய்வகுமரன், மகளிர் அணி செயலாளர் கலா வேலு, மாவட்ட பொருளாளர் முனியப்பன், மாநில அமைப்பு செயலாளர் ஜனா, மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி, இளைஞரணி சரவணன், ஒன்றிய செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ராஜகுலத்தோர் சமுதாய மக்கள் படிப்பில் உயர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில், தனி ஒதுக்கீடாக 5 சதவீதம் வழங்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில், ராஜகுலத்தோர் நல வாரியம் என தனி வாரியம் அமைத்து தர வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement