புகார் பெட்டி விழுப்புரம்

கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் விழுப்புரம் குருசாமி பிள்ளை வீதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.

- சந்திரசேகர், விழுப்புரம். தாறுமாறாக செல்லும் வாகனங்கள் ஜானகிபுரம் ரவுண்டானா பகுதியில் விதிகளை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

- சுதாகர், ஜானகிபுரம். குண்டும், குழியுமான சாலை பனையபுரம் கூட்ரோடு அருகே செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.

- சிவக்குமார், விக்கிரவாண்டி. மக்கள் அவதி விழுப்புரம் - அனிச்சம்பாளையம் செல்லும் சாலை பொதுமக்கள் பயணிக்க லாயகற்ற நிலையில் உள்ளதால் மக்கள் அவதியடைகின்றனர்.

- சரிதா, அனிச்சம்பாளையம்.

Advertisement