சத்துணவு ஓய்வூதியர்கள் போராட்டம் 

கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன் நிறைவுரையாற்றினார்.

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2.57 காரணிப்படி ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும்.

ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரம், மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போரா ட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement