பிராமணர் சங்க கூட்டம்

கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், கடலுார் மஞ்சக்குப்பம் கிளை மாதாந்திர கூட்டம் நடந்தது.

மஞ்சக்குப்பத்தில் நடந்த கூட்டத்தில், கிளைத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் பரகால ராமானுஜம் ஆண்டறிக்கை வாசித்தார். 2024-25ம் ஆண்டிற்கான வரவு, செலவு கணக்கை பொருளாளர் நரசிம்மன் வாசித்தார்.

மாநிலத் தலைவராக பதவியேற்ற நாராயணனனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement