மா.கம்யூ., நடை பயண போராட்டம்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் மா .கம்யூ., சார்பில் நடை பயண போராட்டம் ந டந்தது.
விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லை அருகே உள்ள தண்டரை ஊராட்சியில் இருந்து அடுக்கம் ஊராட்சி வரையிலும், திருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் வரையிலும் இணைப்பு சாலை போட வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தண்டரை கிராம மக்களுடன், மா.கம்யூ., கட்சியினர் கண்டாச்சிபுரம் தாலு கா அலுவலகம் வரை நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முரு கன் தலைமை தாங்கினார்.
வட்ட செயலாளர் கணபதி, மாவட்ட குழு உறுப்பினர் தாண்டவராயன் முன்னிலை வகித்தனர். உமா மகேஸ்வரி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். வட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்