மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் விழா துவக்கம்
பழநி: பழநி கிரி வீதி பாத விநாயகர் கோயில் அருகே உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆராதனை விழா துவங்கியது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயில் விழா ஜூலை 11 காலை கணபதி ஹோமம், மூர்த்தக்கால் நடுதலுடன் விழா துவங்கியது.
இதையொட்டி நேற்று சண்முக நதி சென்று தீர்த்தம் எடுத்து வர அம்மன் ரத பவனி நடைபெற்றது. இன்று அம்மனுக்கு முளைப்பாரி மாவிளக்கு பூஜை நடைபெறும். நாளை (ஜூலை 24)சிறப்பு தீபாராதனை நடைபெறும். ஜூலை 25ல் அம்மனுக்கு மறுபூஜை அலங்காரம், ஜூலை 26 ல் அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் ஜூலை 26 வரை பல்வேறு அலங்காரங்களில் அம்மன் அலங்கரிக்க பத்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
Advertisement
Advertisement