புதிய கட்டடங்கள்: எம்.எல்.ஏ., திறப்பு

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் புதிய கட்டடங்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மதனகோபால புரம் ஊராட்சியில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம், 9.45 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடையை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர், மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சஹானா, துணை பி.டி.ஓ., விஜயலட்சுமி, இன்ஜினியர் அனுஷா, வருவாய் ஆய்வாளர் சுதா, மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், கோவிந்தராஜ், வெங்கடேசன், காசிநாதன் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜ்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ், துணை அமைப்பாளர் ராஜதுரை, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் கலந்து கொண்டனர்.

Advertisement