ஹூப்பள்ளி - சென்னை ரயில் குன்டக்கல் செல்லும் நேரம் மாற்றம்

பெங்களூரு : 'ஹூப்பள்ளியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில், குன்டக்கல்லில் நின்று செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது;

யாத்கிர் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பயனடையும் வகையில், ரயில் எண்: 22691 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - புதுடில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி தினசரி விரைவு ரயில், வரும் 27ம் தேதி முதல் யாத்கிர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அதுபோன்று எண் 22692: புதுடில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ராஜ்தானி விரைவு ரயில், வரும் 26ம் தேதி முதல் யாத்கிர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

ரயில் எண் 17313 எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை இயங்கும் ரயில், குன்டக்கல் ரயில் நிலையத்தில், முன்பு 3:00 மணிக்கு நின்று, 3:05 மணிக்கு புறப்பட்டது. வரும் 25ம் தேதி அதிகாலை முதல் 3:05 மணிக்கு நின்று 3:10 மணிக்கு புறப்படும்.

எண் 16220: திருப்பதி - சாம்ராஜ்நகர் தினசரி விரைவு ரயில், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள பாகலா ரயில் நிலையத்தில், இரவு 10:29 மணிக்கு நின்று, 10:30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது; ஆகஸ்ட் 17ம் தேதி முதல் இரவு 10:19 மணிக்கு நின்று, 10:20 மணிக்கு புறப்படும்.

அதுபோன்று எண் 11085: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மத்திய பிரதேசம் குவாலியர் வாரம் ஒருமுறை இயங்கும் விரைவு ரயில், ஆந்திர மாநிலம், அனந்தபூர் ரயில் நிலையத்தில், இரவு 8:18 மணிக்கு நின்று, 8:20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. ஆக., 22ம் தேதி முதல் 8:23 மணிக்கு நின்று 8:25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

Advertisement