'2 சீரிஸ் கிராண்ட் கூபே' பி.எம்.டபுள்யூ.,வின் முதல் '3 சிலிண்டர்' இன்ஜின் கார்

'பி. எம்.டபுள்யூ.,' நிறுவனம், அதன் '2 சீரிஸ் கிராண்ட் கூபே' செடான் காரை மேம்படுத்தி, இரண்டாம் தலைமுறையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், 'பெட்ரோல்' இன்ஜினில் மட்டும் வருகிறது. '218ஐ எம் ஸ்போர்ட்', '218ஐ எம் ஸ்போர்ட் பிரோ' ஆகிய இரு மாடல்களில் வந்துள்ளது.
இது, இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதல் 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் கார் ஆகும். இதில், 1.5 லிட்டர், மைல்டு ஹைபிரிட், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. பழைய 4 சிலிண்டர் இன்ஜினுடன் ஒப்பிடுகையில், 20 ஹெச்.பி., பவர், 50 என்.எம்., டார்க் குறைத்து, அதிக மைலேஜ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.
காரின் நீளம் 20 எம்.எம்., அகலம் 25 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 13 எம்.எம்., அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபுள்யூ.,வின் ஒளிரும் விசேஷ கிட்னி கிரில், மெல்லிசான டி.ஆர்.எல்., லைட்டுகள், 'ஸ்போர்ட்ஸ்' பம்பர்கள், கூப் ஸ்டைலில் ரூப், பிரேம்லெஸ் கதவுகள், 18 அங்குல டூயல் டோன் அலாய் சக்கரங்கள் ஆகியவை புதிய மாற்றங்கள்.
உட்புறத்தில், 10.7 மற்றும் 10.25 அங்குல டூயல் டிஸ்ப்ளே, பேனரோமிக் சன் ரூப், ஆட்டோ பார்க் அசிஸ்ட், டிஜிட்டல் சாவி, 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 6 காற்று பைகள், அடாஸ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.
'எம் ஸ்போர்ட் பிரோ' மாடல் காருக்கு, கூடுதலாக 'எம் ஸ்போர்ட்' சஸ்பென்ஷன், பிரேக், ஸ்டீயரிங் உள்ளிட்டவை வருகின்றன.
மேலும்
-
6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!
-
சீனர்களுக்கு சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்குகிறது இந்தியா
-
உலகின் டாப் 10 பட்டியலில் மும்பை விமான நிலையம்: தொடர்ந்து 3ம் ஆண்டாக சாதனை
-
பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி