ஏ.டி.ஜி.பி.,க்கு சம்மன் அனுப்பாதது ஏன்? சி.பி.சி.ஐ.டி.,க்கு ஐகோர்ட் கேள்வி

1


சென்னை: காதல் திருமண விவகாரத்தில், திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், தொழில் அதிபரான வனராஜா, முன்னாள் எஸ்.ஐ., மகேஸ்வரி, மணிகண்டன் உள்ளிட்டோரை, திருவாலங்காடு போலீசார் ஜூன் 13ல் கைது செய்தனர்.

மனு தாக்கல் இந்த வழக்கில், ஏ.டி.ஜி.பி., ஜெயராம், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப் பட்டது. இதை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும் நிலையில், கைதானவர்கள் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, “வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்த பின், இடைநீக்கம் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராமை, ஒரு முறை கூட விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்காதது ஏன்,” என கேள்வி எழுப்பியதுடன், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தார்.



ஒத்திவைப்பு சி.பி.சி.ஐ.டி., தரப்பில், 'ஜூலை 24ல் விசாரணைக்கு ஆஜராகும்படி ஜெயராமுக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, வழக்கின் உத்தரவு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement