தமிழகத்தில் யாரும் நிம்மதியாக இல்லை

7

பா.ஜ.,வை பொறுத்தவரையில் தேசிய கட்சியாக, நாட்டையும் கட்சியும் முன்னிலைப்படுத்தும் கட்சி. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

தி.மு.க., அரசு, நாளுக்கு நாள் மக்கள் மனங்களில் இருந்து கீழ் இறங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், இனிமேல் தி.மு.க., கூட்டணி ஒற்றுமையாக இருக்காது. கூட்டணியில் இருந்து, பல கட்சிகள் வெளியேறும் காலம் வந்து விட்டது. அதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கி உள்ளன.

இதே நிலையில் சென்றால், தி.மு.க.,வின் அரசியல் வரலாற்றில், வரும் 2026 தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்.

தமிழக பெண்கள், தங்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை என நினைக்கின்றனர். அதேபோல தமிழகத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிகளும் சொல்ல முடியாத அளவுக்கு படு பாதாளத்துக்கு சென்றுள்ளது. யாரும் நிம்மதியாக இல்லாத நிலையில் தி.மு.க., வெற்றி பெறுவது இயலாத காரியம்.


- அண்ணாமலை,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement