ஏர் இந்தியா விமானத்தில் தீ: பயணியர் வெளியேற்றம்
புதுடில்லி: ஹாங்காங்கில் இருந்து டில்லி வந்த, 'ஏர் இந்தியா' விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பயணியர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட, 'ஏர் இந்தியா' பயணியர் விமானமான ஏ.ஐ., 315, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது. சிறிது நேரத்திலேயே, 'ஆக்சிலரி பவர் யூனிட்' எனப்படும் விமானத்தின் துணைமின் அலகில் தீப்பற்றியது.
விமானத்தின் சிஸ்டம், தீ விபத்தை கண்டறிந்தவுடன் துணைமின் அலகு தானாகவே செயலிழந்தது. விமானத்தில் இருந்து பயணியர் இறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பதற்றத்தில் அலறிய பயணியர் அவசரமாக ஓட்டம் பிடித்தனர்.
விமானத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 'ஏர் இந்தியா' தெரிவித்துள்ளது .
கடந்த ஆறு மாதங்களில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக, 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு, ஒன்பது நோட்டீஸ்கள் அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்
-
துணை ஜனாதிபதி தேர்தல் வரலாறு: 4 முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு
-
6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!
-
சீனர்களுக்கு சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்குகிறது இந்தியா
-
உலகின் டாப் 10 பட்டியலில் மும்பை விமான நிலையம்: தொடர்ந்து 3ம் ஆண்டாக சாதனை
-
பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்