தங்கம் சவரன் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.75,040!

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9180 ரூபாய்க்கும், சவரன், 73,440 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 105 ரூபாய் உயர்ந்து, 9285 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 840 ரூபாய் அதிகரித்து, 74,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூலை 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ரூ. 75 ஆயிரத்தை கடந்து, நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (4)
அப்பாவி - ,
23 ஜூலை,2025 - 16:07 Report Abuse

0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
23 ஜூலை,2025 - 14:02 Report Abuse

0
0
Reply
Karthik Madeshwaran - ,இந்தியா
23 ஜூலை,2025 - 10:29 Report Abuse

0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
23 ஜூலை,2025 - 10:23 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஜெய்ஸ்வால், சுதர்சன் அரைசதம்: இந்திய அணி அபார ஆட்டம்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
உலக செஸ்: பைனலில் திவ்யா
-
வரலாறு படைத்தார் ஷ்ரேயாசி * ஆசிய ரோலர் ஸ்கேட்டிங்கில் தங்கம்
-
சாய் சுதர்சன் முதல் அரைசதம்; காயத்தால் பாதியிலேயே வெளியேறிய பன்ட்
-
மும்பை தாக்குதல் சம்பவத்தில் டேவிட் ஹெட்லிக்கு ராணா உதவியது எப்படி: குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தகவல்!
Advertisement
Advertisement