உலக விளையாட்டு செய்திகள்

மூத்த வீராங்கனை
வாஷிங்டன் ஓபன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் (45 வயது) 6-3, 6-4 என சகவீராங்கனை பெய்டன் ஸ்டீர்ன்சை (23 வயது) வீழ்த்தினார். மார்டினா நவரத்திலோவாவுக்கு (47 வயது, 2004) பின், டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற மூத்த வீராங்கனையானார் வீனஸ்.
பைனலில் நைஜீரியா
மொராக்கோவில் நடக்கும் பெண்கள் ஆப்ரிக்க கோப்பை கால்பந்து அரையிறுதியில் நைஜீரியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இதில் நைஜீரியா 2-1 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் மொராக்கோ அணி 4-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் கானா அணியை வீழ்த்தியது.
ஜப்பான் கலக்கல்
சீனாவில் நடக்கும் பெண்கள் ஆசிய யூத் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ஜப்பான் அணி 39-24 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் சீன அணி 28-26 என, தென் கொரியாவை தோற்கடித்தது.
எக்ஸ்டிராஸ்
* கோல்கட்டாவில் நேற்று நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து 134வது சீசனுக்கான லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுத் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
* பஹ்ரைனில் நடக்கும் உலக '6-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 4-2 என, போலந்தின் தாமஸ் ஸ்கால்ஸ்கியை வீழ்த்தினார். இந்தியாவின் பராஸ் குப்தா, மனன் சந்திரா, ஆதித்யா மேத்தா ஆகியோரும் காலிறுதிக்குள் நுழைந்தனர்.
* சுவிட்சர்லாந்தில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாந்த், அர்ஜுன் காதே ஜோடி 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் ஜிரி பார்னட், பிலிப் டுடா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மேலும்
-
தமிழகத்தில் உயர்கிறது தக்காளி விலை
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
பிரிட்டன் ஒப்பந்தத்தால் தொழில் துறை... உற்சாகம்! கோவை, திருப்பூர் ஏற்றுமதி அதிகரிக்கும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
ரூ.42 லட்சம் திருட்டு வழக்குவழக்கறிஞர் முன்ஜாமின் தள்ளுபடி
-
சி.பி.ஐ., அலுவலகத்தில் நிகிதா ஆஜர் மூன்றரை மணி நேரம் விசாரணை