தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் எதிரொலி: கோவில் நிலம் குத்தகை பல மடங்கு உயர்வு
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலின் பின்புறம் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த வாரம் கோவில் செயல் அலுவலர் தேவகி முன்னிலையில் அந்த நிலத்துக்கான குத்தகை ஏலம் நடந்தது.
தி.மு.க., வில் இரண்டு கோஷ்டிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்படடோர் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏலம் போனது. ஆனால், தற்போது தி.மு.க., வில் நிலவும் கோஷ்டி பிரச்னை காரணமாக 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
தி.மு.க., வினரின் கோஷ்டி பூசலால் கடந்த ஆண்டை விட 11 மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் போனது. அதே போன்று எழுமேட்டில் உள்ள 7 ஏக்கர் நிலத்தை கடந்த 35 ஆண்டாக ஒருவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்தார்.
அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து பயன்படுத்தி வந்ததால் வேறு யாருக்கும் குத்தகைக்கு விட கூடாது என வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் அதற்கான ஏலமும் நடந்தது.
இதில் ஏற்கனவே குத்தகை எடுத்தவரின் மனைவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ஏற்கனவே ஏலம் எடுத்தவரின் மனைவி 2 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். இது கடந்த காலத்தை விட 8 மடங்கு கூடுதலாகும்.
ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முறையாக விளம்பரம் செய்து அனைத்து கோவில்களின் நிலங்களுக்கும் ஏலம் நடத்தினால் மேலும் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. இதன் மூலமாக அறிலையத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
மேலும்
-
6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!
-
சீனர்களுக்கு சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்குகிறது இந்தியா
-
உலகின் டாப் 10 பட்டியலில் மும்பை விமான நிலையம்: தொடர்ந்து 3ம் ஆண்டாக சாதனை
-
பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி