மருத்துவமனையில் இருந்தே இன்றும் அரசு பணி; பயனாளிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்!

57

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.


@1brதமிழக முதல்வர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.

நேற்று, உங்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று (ஜூலை 23) தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங்
வாயிலாக ஆலோசனை நடத்தினார்.



அப்போது முகாமிற்கு வந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அவர் பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலந்துரையாடினார். அப்போது முதல்வருடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement