வெளிநாட்டு பயணியிடம் பாலியல் சீண்டல்: தி.மலை வியாபாரி கைது

திருவண்ணாமலை, :திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் ஆஸ்ரமங்களுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வருகின்றனர். கடந்த வாரம் நேபாள நாட்டை சேர்ந்த, 45 வயது பெண், திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். அவர், கிரிவலப்பாதையில் செங்கம் சாலையில் காளியம்மன் கோவில் அருகே உள்ள பூக்கடைக்கு சென்றார்.



அப்போது அங்கிருந்த வியாபாரி, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்பெண், அவரது நாட்டு துாதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, துாதரகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் படி, திருவண்ணா
மலை டவுன் போலீசார், நேற்று
திருவண்ணாமலையை சேர்ந்த சேட்டு, 40, என்பவரை கைது செய்தனர்.

Advertisement