மூடப்பட்ட மாவட்ட சிறை கலெக்டர் - எஸ்.பி., ஆய்வு

ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், 1901ல் கிளை சிறை தொடங்கப்பட்டது. 2008ல், மாவட்ட சிறையாக தரம் உயர்த்தப்பட்டது. 200 பேரை அடைக்-க, வசதிகள் உள்ளன. கடந்த பிப்., 28ல், அங்கிருந்த கைதிகள், போலீசார், சேலம் மத்-திய சிறைக்கு மாற்றப்பட்டனர். தற்போது மாவட்ட சிறை பயன்பாடின்றி உள்ளது. இங்கு வங்கதேச கைதிகளை அடைக்க ஏற்பாடு நடப்பதாக, சிறைத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எஸ்.பி., கவுதம்கோயல், மாவட்ட சிறை வளாகம், கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பிருந்தாதேவி கூறுகை
யில், ''மாவட்ட சிறை மற்றும் சேலம் மத்திய சிறைக்கு, வேறு இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. அதனால் இங்கு என்ன பணி மேற்கொள்ளலாம் என்பது குறித்து, ஆய்வு முடிந்த பின் தகவல்
தெரிவிக்கப்படும்,'' என்றார்.
ஆத்துார் தாசில்தார் பாலாஜி, டி.எஸ்.பி., சதீஷ்குமார் உடனிருந்தனர்.

Advertisement